Fixed Deposit: வட்டி விகிதம் உயர்வு.. சீனியர் சிட்டிசன்களுக்கு ஸ்பெஷல் ரேட்!

Senior Citizen FD: சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு வட்டியுடன் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது தனலட்சுமி வங்கி.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்திய பிறகு பல்வேறு வங்கிகள் தொடர்ந்து ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது தனியார் வங்கியான தனலட்சுமி வங்கி (Dhanlaxmi Bank) ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது.
இதன்படி, 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது தனலட்சுமி வங்கி. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.50% கூடுதல் வட்டியும் வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் மே 26ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.