‘பிடிவாதமாக இருந்த பும்ரா’…காயம் குணமடையாமல் இருக்க இதுதான் காரணம்? சுயநலத்தால் வந்த விணை!
கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2022 தொடருக்கு முன், முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜஸ்பரீத் பும்ரா அத்தொடரில் பங்கேற்கவே வில்லை.
இதனைத் தொடர்ந்து ஆசியக் கோப்பைக்கு பிறகு நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பையில் பும்ராவை பங்கேற்க வைக்க வேண்டும் என்ற நோக்கில், ஆஸ்திரேலிய டி20 தொடரில் பும்ரா சேர்க்கப்பட்டார். அப்போது பும்ராவுக்கு காயம் முழுவதுமாக குணமடையவில்லை. இருப்பினும், விளையாட வைக்கப்பட்டார். இதனால், பும்ராவின் காயத்தில் தன்மை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது.
மீண்டும் அதே இடத்தில்:
இந்த பிரச்சினை காரணமாக பும்ரா, டி20 உலகக் கோப்பை 2022 தொடரையும் தவறவிட்டார். அடுத்து எந்த தொடரிலும் பங்கேற்காமல் இருந்து வந்த பும்ராவை, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சேர்த்தனர். இருப்பினும், சேர்த்தப் பிறகு மீண்டும் அணியிலிருந்து நீக்கினார்கள். காரணம், பும்ராவின் காயம் குணமடைந்தப் பிறகு, மீண்டும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பும்ரா முழுவதுமாக குணமடைந்துவிட்டதாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்தப் பிறகு ஐபிஎல் 16ஆவது சீசனில் கம்பேக் கொடுப்பர் என தகவல் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. இந்திய அணிக்காக விளையாடும்போது மட்டும் இருந்த காயம், ஐபிஎலின் போது மட்டும் எப்படி காணாமல் போனது என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள்.
பும்ரா விலகல்:
இந்நிலையில், ஐபிஎல் 16ஆவது சீசனில் இருந்து ஜஸ்பரீத் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டி20 உலகக் கோப்பை 2022 தொடரின்போது, பும்ராவின் காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியிருகிறார்கள். அறுவை சிகிச்சை செய்தால், ஐபிஎல் 16ஆவது சீசன் முடியும்வரை ஓய்வில் இருக்க வேண்டும் என்தால், அவர் அதனை தவிர்த்துவிட்டு, மருத்து மாத்திரைகள் மூலம் முதுகுவலி பிரச்சினையை சரிசெய்யுங்கள் என மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார்.
மேலும் அதிகரித்த பிரச்சினை:
அப்படி மருத்து மாத்திரைகள் எடுத்து வந்த அதே நேரத்தில், முதுகு வலி பிரச்சினை மேலும் மேலும் அதிகரிக்க துவங்கியிருகிறது. இதனால்தான், ஐபிஎல் 16ஆவது சீசன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து பும்ரா விலகியுள்ளாராம். மேலும், இவருக்கு உடனே சிறிய அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால், ஆசியக் கோப்பை 2023 தொடரிலும் பும்ரா பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டி20 உலகக் கோப்பை 2022 தொடரின்போதே பும்ரா அறுவை சிகிச்சை செய்திருந்தால், அவர் விரைவில் குணமடைந்திருப்பார் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.