Post Officeல கிராமப்புற மக்களுக்கு இப்படியொரு திட்டமா.. இத்தனை நாள் தெரியாம போச்சே!
கிராமப்புற மக்களுக்கு இன்சூரன்ஸ் பலன்களை தரும் கிராம சுமங்கல் தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம்.
கிராமப்புற மக்களுக்கும் ஆயுள் காப்பீடு சேவைகள் கிடக்க வேண்டும் என்பதற்காக 1995ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு (Rural Postal Life Insurance) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள், விளிம்புநிலை சமூகங்கள், பெண் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் சேவை வழங்குவது, கிராமப்புற மக்களுக்கு இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் இலக்காகும்.
கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில் கிராம சுமங்கல் தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம் (Gram Sumangal Rural Postal Life Insurance) பற்றி பார்க்கலாம்.
கிராம சுமங்கல் தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒரு மணிபேக் பாலிசி (Money Back Policy) ஆகும். இத்திட்டத்தில் அதிகபட்ச உத்தரவாத தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும். குறிப்பிட்ட காலத்தில் வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு இது உகந்த திட்டம்.
பாலிசிதாரர் உயிருடன் இருக்கும்போது குறிப்பிட்ட காலத்தில் தொடர்ந்து வருமானம் வழங்கப்படும். பாலிசிதாரர் இறந்துவிட்டால் ஒட்டுமொத்த தொகையுடன் போனஸ் தொகையும் சேர்த்து பாலிசிதாரரின் வாரிசுகள் அல்லது நாமினிக்கு வழங்கப்படும். 15 ஆண்டு, 20 ஆண்டு என இரண்டு வகையான பாலிசி காலங்கள் உள்ளன. திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 40 ஆகும்.
பாலிசிதாரர் உயிருடன் இருந்தால்:
- 15 ஆண்டு பாலிசி – 6 ஆண்டு நிறைவடைந்ததும் 20%, 9 ஆண்டு நிறைவடைந்ததும் 40%, 12 ஆண்டு நிறைவடைந்ததும் 40% என போனஸ் தொகையுடன் சேர்த்து நிதி பகிர்ந்தளிக்கப்படும்.
- 20 ஆண்டு பாலிசி – 8 ஆண்டு நிறைவடைந்ததும் 20%, 12 ஆண்டு நிறைவடைந்ததும் 40%, 16 ஆண்டு நிறைவடைந்ததும் 40% என போனஸ் தொகையுடன் சேர்த்து நிதி பகிர்ந்தளிக்கப்படும்.
போனஸ் தொகை:
ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ஆண்டுக்கு 45 ரூபாய் போனஸ்.