கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!

கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடன் வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் இனி வீட்டுக் கடன்
ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் ஜூன் 6ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கொள்கை கூட்டத்தின் அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் இன்று வெளியிட்டார். அதில் குறிப்பாக, ரெப்போ வட்டியை 4.90% ஆக உயர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பையும் உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, கூட்டுறவு வங்கிகள் வழங்கும் தனிநபர் வீட்டுக் கடன்களுக்கான வரம்பு 100% மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி இனி நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் 60 லட்சம் ரூபாய் முதல் 1.4 கோடி ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறலாம். இதற்கு முன் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் 30 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வீட்டுக் கடன் பெற முடியும்.