நெல்லை பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் உட்பட மூவர் கைது
நெல்லை டவுண் சாப்டர் பள்ளி கட்டடம் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மாணவர்களின் உடல்கள்உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது. மூன்றுபேரின் உடலுக்கும் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர்ராஜகண்ணப்பன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அரசு அறிவித்த நிவாரண உதவியையும் வழங்கினர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், கட்டிட ஒப்பந்தகாரர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நெல்லை டவுண் சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இடைவேளையில் மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது கழிப்பறை தடுப்புசுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன் , சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக் அபுபக்கர் சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய 4 பேர் பாளையங்கோட்டை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் இறந்த மாணவர்களுக்கு தலா 10 லட்சமும் , காயம் அடைந்த மாணவர்களுக்கு 3 லட்சமும் உதவித் தொகையாக அறிவித்தார்.
இந்த உதவித்தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகசட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர்ராஜகண்ணப்பன் மற்றும் ஆட்சியர் விஷ்ணு, ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
இதனிடையே இறந்த மாணவர்களின் உறவினர்கள்உடலை வாங்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு , அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.