மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வரை அதிகரித்து வந்த நிலையில் இன்று அதன் அளவு குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

நேற்று 10,500 கன அடியாக இருந்த நீர்வரத்தின் அளவு, இன்று 7500 கன அடியாக சரிந்துள்ளது.

இதனையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 11,600 கன அடியில் இருந்து 7000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மேலும் அணையில் தற்போது 93.47 டி.எம்.சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *