சீனாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 242 பேர் பலி

dttamil

பீஜிங்,

சீனாவில் கொரானா வைரசுக்கு இதுவரை இல்லாத அளவாக மிக அதிக எண்ணிக்கையில் நேற்று ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் கொரானா வைரஸுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1367ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் வூகானில் இருந்து கொரானா வைரஸ் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து ஹூபே மாகாணம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் பிற பகுதிகளுக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரானா வைரஸுக்கு 242 பேர் பலியாகியுள்ளனர். கொரானா வைரஸ் பரவியது முதல் மிக அதிக எண்ணிக்கையில் கடந்த 10ம் தேதிதான் ஒரேநாளில் 103 பேர் பலியாகியிருந்தனர்.

தற்போது அந்த எண்ணிக்கையை காட்டிலும் 2 மடங்கு எண்ணிக்கையில் உயிர் பலி ஒரேநாளில் நேரிட்டுள்ளது. நேற்று முன்தினம் கொரானா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து விட்டதாக சீனா அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலேயே 242 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து சீனாவில் மட்டும் கொரானா வைரஸுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,367ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர்த்து ஹூபே மாகாணத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 2,015 பேருக்கு புதிதாக கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 14,840ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி, உடனடியாக கட்டுப்படுத்தவில்லையெனில், மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என உலக சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரானா வைரஸ் உலகின் எந்த பகுதிக்கும் பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஹெப்ரியேசஸ்  எச்சரித்துள்ளார். குளோபல் அவுட்பிரேக் அலர்ட் மற்றும் ரெஸ்பான்ஸ் அமைப்பின் தலைவரான டெல் பிசர், சீனாவில் கொரானா வைரஸ் இன்னும் வேகமாக பரவுக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச கிரான்ட்பிரிக்ஸ் கார்பந்தய போட்டி ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரானா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த போட்டி ரத்து செய்யப்பட்டு விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் " மிரட்சி "

பீஜிங், சீனாவில் கொரானா வைரசுக்கு இதுவரை இல்லாத அளவாக மிக அதிக எண்ணிக்கையில் நேற்று ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் கொரானா வைரஸுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1367ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூகானில் இருந்து கொரானா வைரஸ் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து ஹூபே மாகாணம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் பிற பகுதிகளுக்கு சென்று வர […]

You May Like

Subscribe US Now