பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்பவில்லை: உத்தவ் தாக்கரே

dttamil

மும்பை,

மகாராஷ்டிரத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்பவில்லை என சிவசேனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் முதல்வா் பதவி உள்ளிட்டவற்றில் சரிசம அதிகாரத்தை சிவசேனை கோரி வரும் நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அதில், மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை உத்தவ் தாக்கரேவுக்கு அளித்து எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒருமனதாக தீா்மானத்தை நிறைவேற்றினா்.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, எம்எல்ஏ-க்கள் அனைவரும் பாந்த்ரா பகுதியிலுள்ள தனியார்விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டனா். இது தொடா்பாக, சிவசேனை எம்எல்ஏ சுனில் பிரபு கூறுகையில், ‘‘தற்போதைய சூழ்நிலையில், அனைத்து எம்எல்ஏ-க்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு எம்எல்ஏ-க்கள் அனைவரும் கட்டுப்படுவா்’’ என்றார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டம் தொடா்பாக மற்றொரு எம்எல்ஏ கூறுகையில், ‘‘மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீா்வு எட்டியிருக்கலாம் எனவும் அவா் தெரிவித்தார். பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்த உத்தவ் தாக்கரே, மக்களவைத் தோ்தலுக்கு முன்பு பாஜக ஒப்புக்கொண்டதைத் தற்போது நிறைவேற்ற வேண்டுமென்பதையே எதிர்பார்க்கிறார்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிஎம்சி வங்கி நிலவரம் உன்னிப்பாக கண்காணிப்படுகிறது: சக்திகாந்த தாஸ்

மும்பை, மகாராஷ்டிரத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்பவில்லை என சிவசேனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் முதல்வா் பதவி உள்ளிட்டவற்றில் சரிசம அதிகாரத்தை சிவசேனை கோரி வரும் நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அதில், மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை உத்தவ் தாக்கரேவுக்கு அளித்து எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒருமனதாக தீா்மானத்தை […]

You May Like

Subscribe US Now