உத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு

dttamil

லக்னோ,

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரூ.218.50 கோடியை இணையம் வாயிலாக மாற்றினார். இதனால் 31 ஆயிரத்து 938 சுய உதவிக் குழுக்கள் பயன்பெறுவார்கள்.


இது குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, கரோனா வைரஸை எதிர்கொள்ள அதன் சங்கிலியை உடைப்பது அவசியம். இதற்காக நமது முன்னணி வீரர்கள் (சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்கள்) தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போதுள்ள நிலையில் மக்கள் பொதுஇடங்களில் கூடுகின்றனர். வேலை செய்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் முன்னணி வீரர்களும் பணிபுரிகின்றனர். இந்நேரத்தில் நாம் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும் பங்காற்றுகின்றன. வைரஸை எதிர்கொள்ளும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட ஆடைகளையும் அவர்கள் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.
மேலும், அவர்கள் தங்களுக்குரிய பணியை சிறப்பாக செய்கின்றனர். நான் இன்று சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினேன் என்றார்.
முன்னதாக மத்திய அரசு புதன்கழமை ஸ்டார்ட் அப் இந்தியா போர்ட்டலை தொடங்கியது. இதில் இளைய தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் புள்ளிவிவர ஆய்வு மற்றும் வடிவமைப்பு திட்டங்கள் குறித்த தகவல்கள் உள்ளது.

இதையும் வாசிங்க: இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு

லக்னோ, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரூ.218.50 கோடியை இணையம் வாயிலாக மாற்றினார். இதனால் 31 ஆயிரத்து 938 சுய உதவிக் குழுக்கள் பயன்பெறுவார்கள். இது குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, கரோனா வைரஸை எதிர்கொள்ள அதன் சங்கிலியை உடைப்பது அவசியம். இதற்காக நமது முன்னணி வீரர்கள் (சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்கள்) தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போதுள்ள நிலையில் மக்கள் பொதுஇடங்களில் கூடுகின்றனர். வேலை செய்கின்றனர். […]
சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு

Subscribe US Now