மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு

சென்னை,

மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன் எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்;-

“மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை.

மறைமுக தேர்தல் குறித்து அவசர சட்டம் பிறப்பித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே இந்த மறைமுக தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *