நடிகைகளுக்கு திறமைக்கு ஏற்ற சம்பளம் இல்லை : பிரியாமணி

dttamil

சென்னை,

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியாமணி, நடிகைகளுக்கு திறமைக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பது இல்லை என்று கூறியிருக்கிறார்.

பருத்தி வீரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் இடைவெளியிட்டு மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த மாதிரி பட வாய்ப்புகள் அவருக்கு இல்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் பிரியாமணி சொல்கிறார்:-

“தென்னிந்தியாவில் திறமைக்கு ஏற்ற மாதிரி நடிகைகளுக்கு சம்பளம் கிடைப்பது இல்லை. தென்னிந்திய மொழி படங்களில் நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா ஆகிய 3 பேர் மட்டுமே சம்பளம் இவ்வளவு தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்து கேட்டு வாங்குகிறார்கள். அவர்கள் கேட்டதை கொடுத்தால்தான் நடிப்போம் என்று கறாராக சொல்லும் நிலை இருக்கிறது.

மற்ற கதாநாயகிகள் பலர் நடிப்பு ரீதியாக முன்னிலையில் இருந்தாலும் கூட அவர்களுக்கு சம்பளத்தை கேட்டு வாங்கும் நிலைமை இல்லை. கதாநாயகனை விட குறைவான சம்பளம் என்பது ஒரு நிலையில் இருந்தாலும் இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கேட்கும் நிலையில் அந்த கதாநாயகிகள் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்”.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

சென்னை, தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியாமணி, நடிகைகளுக்கு திறமைக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பது இல்லை என்று கூறியிருக்கிறார். பருத்தி வீரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் இடைவெளியிட்டு மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த மாதிரி பட வாய்ப்புகள் அவருக்கு இல்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் பிரியாமணி சொல்கிறார்:- “தென்னிந்தியாவில் திறமைக்கு ஏற்ற மாதிரி […]

Subscribe US Now