ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்

ஸ்கட்,

ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம் ஓமனை ஆட்சி செய்த மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79.

1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று காபூஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்யாமல் வாழ்ந்த காபூஸ், அடுத்த சுல்தான் யார் என்பதையும் அறிவிக்கவில்லை.

இதனால் அந்நாட்டு வழக்கப்படி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் நாளைக்குள் கூடி புதிய சுல்தானை தேர்வு செய்வார்கள். சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

Image result for ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத்

ஓமன் மன்னர் மறைவுக்கு பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள  பிரதமர் மோதி, “ சுல்தான் காபூஸ் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.  ஓமன் மன்னர், தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். ஓமனை நவீன, செழுமைமிக்க நாடாக மாற்றியவர் சுல்தான் காபூஸ். ஓமனுக்கும் உலகுக்கும் சமாதானத்தின் கலங்கரை விளக்கமாக சுல்தான் காபூஸ் திகழ்ந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *