தட்டுக் கடை

சென்னை,

பெப்பர்ஸ் டிவியில் ஒவ்வொரு புதன்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘தட்டுக்கடை’.. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் விஜே கார்த்தி. இந்த தொகுப்பாளர் இந்த தட்டுக்கடை நிகழ்ச்சியின் மூலமாகவே பிரபலமாகிவிட்டதால் இவர் எங்கு சென்றாலும் இவரை தட்டுக்கடை கார்த்தி என்றே அனைவரும் அழைக்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் உணவு தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதை யாரும் விரும்புவதில்லை. குறைந்த நேரத்தில் தரமான, சுவையான ஆரோக்கியமான தின்பண்டங்களை உருவாக்குவதுதான் இந்த தட்டுக்கடைகளின் அடிப்படை நோக்கம். இதுவரை மகாபலிபுரம், திருவள்ளூர் என பல பகுதிகளைச் சேர்ந்த பிரபலமான தட்டுக்கடைகள் பற்றி இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன.

அதற்காக சாலையோரங்களில் இருக்கும் எல்லா கட்டுக்கதைகளையும் இந்த நிகழ்ச்சிக்காக தேர்வு செய்வதில்லை. எந்த தட்டுக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது, எதற்காக அங்கே விரும்பி வந்து தின்பண்டங்களை வாங்குகிறார்களோ அதுபோன்ற தட்டுக்கடைகளில் அந்த ஜனக்கூட்டத்தின் வாயிலாக அந்த கடையின் அதில் விற்கப்படும் ஸ்பெஷலான தின்பண்டங்களில் விபரம் பற்றியும் நேரடியாகவே கேட்டு ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வழங்குகிறோம். வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட அதிகம் விரும்பிப் பார்க்க்கும் ..இந்நிகழ்ச்சி புதன்கிழமைதோறும் நண்பகல் 12:00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *