இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோதிக்கு மனமார்ந்த நன்றி: கோத்தபய ராஜபக்சே

dttamil

புதுடெல்லி,

இந்தியாவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகை தந்துள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோதி, கோத்தபய  ராஜபக்சேவை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, அதிபராக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார்.

3 நாள் பயணமாக வந்துள்ள அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.  இன்று காலை, குடியரசுத் தலைவர் மாளிகை வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு  அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோதி ஆகியோர் கோத்தப ராஜபக்சேவை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினர்.

பின்னர் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,  அதிபராக இந்தியா வருவது இதுதான் முதல் முறை என்றார். மேலும், இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்  எனவும், பாதுகாப்பு -பொருளாதார பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோட்சே குறித்து பேசிய கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யாசிங் தாகூர்

புதுடெல்லி, இந்தியாவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகை தந்துள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோதி, கோத்தபய  ராஜபக்சேவை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, அதிபராக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவரை டெல்லி […]

You May Like

Subscribe US Now