தலைவி பர்ஸ்ட் லுக்

சென்னை,

விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் நடிக்கும் படம் தலைவி. தாம் தூம் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய அவர் நடிக்கும் தலைவி படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஆகும்.

இந்த படத்தில் கங்கனா அப்படியே முழுவதும் ஜெயலலிதாவாக மாறியுள்ளார். இதற்காக பரதம் கற்றுக்கொண்டார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 26 -ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டருடன் சின்ன டீசரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் ஜெயலலிதா போலவே மாறியுள்ள கங்கனா தனது இரட்டை விரல்களை காட்டியவாறு உள்ளார். இந்த போஸ்டர் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *