புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி கைது

புதுடெல்லி,

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ந்தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். புல்வாமா தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவனுக்கு உதவிய ஷாகிர் பஷீர் மக்ரி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். 22 வயதான ஷாகிர் பஷீர் மக்ரி தற்கொலை குண்டுதாரி ஆதில் அகமது தார் என்பவருக்கு தங்குமிடம் மற்றும் பிற உதவிகளை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது உமர் பாரூக்கால் 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மக்ரி தாரை அறிமுகப்படுத்தினார், பின்னர் அவர் ஜெய்ஸ்-இ-முகமது சேர்ந்தான்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் எண்ணை கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவன் பல்வேறு சமயங்களில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பணம் போன்றவற்றை சேகரித்து வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *