எஸ்கேவின் ‘டாக்டர்’ ஷூட்டிங் தொடக்கம்.!

சென்னை,

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து எஸ்கே புரொடக்ஷன் உடன் கேஜேஆர் இணைந்து ‘டாக்டர்’ என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஹூரோவாக நடிக்கிறார். இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா’ மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் ‘கேங்க் லீடர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பிரியங்கா நாயகியாக நடிக்கிறார். இதில் வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ’கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்க, விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இப்பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கே.ஜே.ராஜேஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், யோகி பாபு, வினய், நாயகி பிரியங்கா, இணை தயாரிப்பாளர் கலை அரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *