கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு புதிய விருது

dttamil

துபாய்,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு லாரியஸ் அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா பெர்லினில் நடைபெற்றது. இதில் சச்சின் தெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு துறையின் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வென்றபின் சக வீரர்கள் சச்சினை தோளில் தூக்கிகொண்டு மைதானம் முழுக்க சுற்றிய போது மொத்த மைதானமும் சச்சின், சச்சின் என முழுக்கமிட்டனர்.

இந்த தருணத்தை வைத்தே சச்சின் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். விருதுப் பட்டியலில் இருந்த 20 பேரில் பொதுமக்கள் சச்சினுக்கு அதிகளவில் வாக்களித்திருந்தனர்.கால்பந்து வீரர் மெஸ்சி, கார்பந்தய வீரர் ஹாமில்டன் ஆகியோருக்கும் இதே விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு

துபாய், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு லாரியஸ் அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா பெர்லினில் நடைபெற்றது. இதில் சச்சின் தெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு துறையின் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வென்றபின் சக வீரர்கள் சச்சினை தோளில் தூக்கிகொண்டு மைதானம் முழுக்க […]

Subscribe US Now