வியாபாரிகளிடம் வெங்காயம் கையிருப்பு அளவு குறைப்பு

புதுடெல்லி,

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வியாபாரிகளின் கையிருப்பு அளவை பாதியாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வெங்காய விலை குறையாத நிலையில், நுகர்வோர் விவகாரத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சில்லரை வியாபாரிகள் கையில் வைத்திருப்பதற்கான வெங்காய இருப்பு அளவு 10 டன்னில் இருந்து 5 டன்களாகவும், மொத்த விலை வெங்காய வியாபாரிகளின் கையிருப்பு அளவு 50 டன்களில் இருந்து 25 டன்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கையிருப்பு அளவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *