ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு

சென்னை,

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், கடந்த சனிக்கிழமையன்று அறிவித்த 2 கட்ட தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை, தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தேர்தலை எதிர்கொள்ளும் 27 மாவட்டங்களிலும், வருகிற 27 மற்றும் 30ஆம் தேதிகளில், 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில், முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், அவற்றிற்குட்பட்ட ஊராட்சிகளிலும், வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 158 ஊராட்சி ஒன்றியங்களிலும், அதற்குட்பட்ட ஊராட்சிகளிலும், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் விவரங்கள் உள்ளிட்ட, தேர்தலுக்கான அனைத்து அறிவிப்புகளும் இடம்பெற்ற அறிவிப்பாணை, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *