ஹோலி பண்டிகை; பிரதமர் மோதி வாழ்த்து

புதுடெல்லி,

ஹோலி பண்டிகை நாட்டுமக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரட்டும் என பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வசந்தத்தை வரவேற்கும் விதமாகவும், அரக்கி ஹோலிகா எரிக்கப்பட்டதை கொண்டாடும் வகையிலும் ஹோலி பண்டிகை ஆண்டு தோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரும் பவுர்ணமி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஹோலிப் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி,  பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

இந்த வண்ணமயமான ஹோலி நன்னாளில், அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி பொங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *