அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோதி ஆலோசனை

dttamil

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோதி ஆலோசனை நடத்தி வருகிறார்.

உலகம் முழுவதும் சுமார் 184 -க்கும்  மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால், 40- க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  இன்றோடு 15 நாட்கள் ஆகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 5,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவிலும் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இத்தகைய சூழலில், அனைத்துக் கட்சி  பிரதிநிதிகளுடன் பிரதமர் மோதி இன்று ஆலோசனை நடத்தினார்.  காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த  ஆலோசனைக்கூட்டத்தில்  ஊரடங்கு நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பாக  நவநீதகிருஷ்ணன், திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒடிசாவில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோதி ஆலோசனை நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் சுமார் 184 -க்கும்  மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால், 40- க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நாடு […]

Subscribe US Now