குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

dttamil

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் -1 தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குரூப் 1 முதல்நிலை தேர்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை எனப் புகார் எழுந்ததையடுத்து தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

முன்னதாக தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று கூறி, அதற்கான மதிப்பெண்களை வழங்கிவிட்டதாக டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்வு எழுதிய ஒருவர் தொடர்ந்த வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இதனை பொதுவழக்காக கருதி ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கேள்வித்தாள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதால் குரூப் 1 தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹாங்காங் அருகே சீன ஹெலிகாப்டர்கள் போர் ஒத்திகை

சென்னை, டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் -1 தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை எனப் புகார் எழுந்ததையடுத்து தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று கூறி, அதற்கான மதிப்பெண்களை வழங்கிவிட்டதாக […]

Subscribe US Now