அடிலெய்ட்,
பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்துள்ளார்.
அடிலெய்டில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாளில் சதமடித்து அசத்திய வார்னர், லபுஸ்ஹக்னே ஆகியோர் 2ஆவது நாளான இன்றும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
சிறப்பாக விளையாடிய லபுஸ்ஹக்னே 162 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 389 பந்துகளில் தனது முதல் முச்சதத்தை விளாசினார். இதில் 37 பவுண்டர்களும் அடங்கும்.
இதன்மூலம் 299 ரன்கள் அடித்து அடிலெய்டு மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்று புரிந்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் சாதனையை வார்னர் முறியடித்தார்.
மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித், 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டியில் 131 இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் வேலி ஹேமன்ட் ((Wally Hammond)) 7,000 ரன்களை அடித்த சாதனை 73 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. தனது 121ஆவது இன்னிங்ஷில் 26 ரன்கள் எடுத்தபோது அந்த சாதனையை ஸ்டீவன் ஸ்மித் முறியடித்தார்.