இரத்த தான கொடையாளிகளுக்கு ஓமன் அவசர அழைப்பு.!

dttamil

மஸ்கட்,

புனித ரமலான் மாதத்தில் இரத்த வங்கிகளில் இரத்த இருப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் இரத்த தான கொடையாளிகளுக்கு ஓமன் அவசர அழைப்பு விடுத்து உள்ளது.


இதுகுறித்து ஓமன் மத்திய இரத்த தான வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நீங்கலாக கீழ்கண்ட இடங்களில் இரத்த தான முகாம் நடக்கிறது.
இரத்த தான முகாமானது, காலை 8.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 7.30 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரையும் நடக்கும்.
இரத்த தான கொடையாளிகள் கலந்து கொள்ள வேண்டும். இரத்த தான முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-

மே மாதம் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)
ஹே அல் இஸ்ஸ் மசூதி (அல் மபிலா வடக்கு)
அல் வஹாப் மசூதி (அல் அரேத்)
Hay Al Iz Mosque (Al Mabaila North)
Al Wahab Mosque ( Al Amerat)

மே மாதம் 15-ந் தேதி (புதன்கிழமை)
சுல்தான் சயீத் பின் தைமூர் மசூதி (அல் குவேர்)
ஹே அல் கவுதார் (6வது அல் கவுத் மாவட்டம்)
Sultan Said Bin Taimur Mosque ( Al Khuwair)
Hay Al Khawthar (Al Khoud sixth District)

மே மாதம் 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)
அல் ரஹ_ல் ஆதம் மசூதி (முத்ராஹ்)
Al Rasool Al A’dham Mosque (Muttrah)
இங்கு ஆண்கள் இரத்த தானம் செய்ய பேருந்து ஒன்று நிற்கும். மேலும் அப்பகுதியில் பெண்கள் இரத்த தானம் செய்யவும் தனியாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பெண் கொடையாளிகள் பெண் நர்ஸிடம் சென்று இரத்த தானம் செய்யலாம்.

மே மாதம் 20-ந் தேதி (திங்கட்கிழமை)
அல் கவுத் மசூதி (அல் கவுத் சந்தை)
ஆஹ் அல் குர்ரான் மசூதி (அல் அன்சாப்)
Al Khoud Mosque ( Al Khoud Market)
Ahl Al Quran Mosque (Al Ansab)

மே மாதம் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)
அல் ஹக் மசூதி (அல் மவாலி)
ஜபீர் பின் சயீத் மசூதி (வாதி கபீர்;)
Al Haq Mosque (Al Mawalih)
Jabir bin Zayd Mosque (Wadi Kabir)

மே மாதம் 22-ந் தேதி (புதன்கிழமை)
சயீத் தாரிக் பின் தைமுர் (அல் கவுத்)
அல் ஜூனாடா பின் மாஜித் மசூதி (அல் கவுத் 6வது மாவட்டம்)
Sayyid Tariq bin Taimur (Al Khoud)
Al Julanda bin Majid Mosque (Al Khould sixth district)

மே மாதம் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)
கடற்கரை தெரு (முத்ராஹ்)
அல் வாபா மசூதி (அல் மாபைலா)
Beach Street (Muttrah)
Al Wafa Mosque ( Al Mabaila)

மே மாதம் 27-ந் தேதி (திங்கட்கிழமை)
சீப் மார்க்கெட் (அப்னா பிரைஸ் சென்டர் அருகில்)
நெக்ஸ்டோ ஹைபர்மார்க்கெட் (அல் ஹெய்ல்)
Seeb Market (Next to Abna Fraish Centre)
Nesto Hypermarket (Al Hail)

மே மாதம் 28-ந் தேதி (செவ்வாய்க்;கிழமை)
அல் கொல்ட் மார்க்கெட் (அல் வலேட் மெடிக்கல் கடை அருகில்)
லூலூ ஹெபர்மார்க்கெட் (அல் அரேட்)
Al Khould Market (Next to Al Waleed Pharmacy)
Lulu Hypermarket (Al Amerat)

இந்த இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் மேல்குறிப்பிட்ட தேதிகளில் சென்று இரத்த தானம் செய்யலாம். இரத்த கொடையாளர்களின் வசதிக்காக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

21 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு தடை..!

மஸ்கட், புனித ரமலான் மாதத்தில் இரத்த வங்கிகளில் இரத்த இருப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் இரத்த தான கொடையாளிகளுக்கு ஓமன் அவசர அழைப்பு விடுத்து உள்ளது. இதுகுறித்து ஓமன் மத்திய இரத்த தான வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நீங்கலாக கீழ்கண்ட இடங்களில் இரத்த தான முகாம் நடக்கிறது. இரத்த தான முகாமானது, காலை 8.00 மணி முதல் மதியம் […]

Subscribe US Now