தர்பார் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சென்னை,

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி – நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார். நவம்பர் 7 அன்று தர்பார் படத்தின் தீம் இசையும் படத்தின் விடியோ போஸ்டரும் வெளியிடப்படும் என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் தகவல் வெளியிட்டார்.

இந்நிலையில் தர்பார் படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *