தோல்விக்கு பிறகும் பதவி தேவையா.? காங்கிரஸ் மூத்த தலைவர்களை வறுத்தெடுக்கும் ராகுல் காந்தி.!

புதுடெல்லி,

தேர்தல் தோல்விக்கு பிறகும் பதவி தேவையா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வறுத்தெடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2014ம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை போன்று, 2019ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலை சோனியா காந்தி தலைமையில் சந்தித்த காங்கிரஸ், இந்த தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது.

கடந்த தேர்தலில் நரேந்திர மோடி குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் நின்று சந்தித்தார். இதனை அப்போதையை ஆளும் கட்சியான காங்கிரஸ் கிண்டல் செய்தது. தோல்வி பயத்தில் நிற்கிறார் என்று காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் 2019 தேர்தலில் ராகுல் காந்தி இரு தொகுதிகளில் நின்றார். உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளத்தில் வயநாடு ஆகியவை அந்த தொகுதிகள். இதில் அமேதியை பாரதிய ஜனதாவின் ஸ்மிருதி இரானியிடம் இழந்த ராகுல் காந்தி வயநாட்டில் மட்டும் வெற்றிக் கொடி நாட்டினார்.

தமிழகம், கேரளம் தவிர மற்ற மாநிலங்களிலும் ஒற்றை இலக்க எண்ணில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. அனைத்து தொகுதிகளிலும் நரேந்திர மோடி அலை வீசியது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகத்திலும் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு பலத்த தோல்வி அடைந்தது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோர் தங்களின் தேர்தல் வைப்பு தொகையினை இழந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அமேதியில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். ராகுல் காந்தியும் தனது தலைவர் பதவியை துறக்க முன்வந்தார். எனினும் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் ராகுல் காந்தியின் முடிவில் சிறிது தொய்வு ஏற்பட்டது என கூறப்பட்டது. எனினும் ராகுல் காந்தி தனது பதவி துறப்பு முடிவில் உறுதியாக இருக்கிறார் என்றே கூறப்படுகிறது.

இதனிடைய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் சந்தித்துள்ளார். அப்போது பதவியை துறக்கும் முடிவில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர் காங்கிரஸார் யாரும் பதவியை துறக்க வேண்டாம். ஆனால் மூத்த தலைவர்கள் பதவியை துறக்காமல் ஓட்டிக் கொண்டு இருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டு உள்ளார்.

இதனிடைய காங்கிரஸ் மூத்த தலைவரும் காங்கிரஸின் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான விவேக் தன்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராகுல் காந்தியின் கோபத்தை தணிக்கும் பொருட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்யவுள்ளனர் என்று கூறப்படுகிறது.!

இதற்கிடையில் ராகுல்காந்தியின் கோபம் காங்கிரஸ் முதல்வர்கள் பக்கம் திரும்பியுள்ளதாக தெரிகிறது.!

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *