நாகர்கோவில் ஆசாரி பள்ளம் மருத்துவர்கள் மார்பக புற்றுநோயை நீக்கி சாதனை

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருத்துவர்கள் மார்பக புற்றுநோயை நீக்கி சாதனை படைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் புற்றுநோய் பிரிவில் கடந்த 10 மாதங்களில் 1761 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை சுமார் 48 சிக்கலான புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உளதாகவும் மருத்துவ கல்லூரி முதல்வர் Dr.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஏற்ப்படுத்தபட்டது இங்கு ஏராளமான மக்கள் புற்றுநோய் பாதிப்பிற்கு பல்வேறு சிகிட்சை முறைகளை பெற்று வருகின்றனர் இந்நிலையில் தாழக்குடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு 3 முறை வேறு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது ஆனால் மீண்டும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு புற்றுநோய் கட்டி முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது இதன் மூலம் அந்த பெண் நலமுடன் உள்ளார் இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் Dr.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்,

“ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் புற்றுநோய் பிரிவில் கடந்த 10 மாதங்களில் 1761 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சுமார் 48 சிக்கலான புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் கதிர்வீச்சு சிகிச்சைக்கான சிறப்பு பிரிவும் தொடங்கப்பட உள்ளது ஆகவே பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று புற்றுநோய் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் நோயாளிகள் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன முறையில் சிறந்த மருத்துவர்களால் இலவசமாக சிறப்பு அறுவை சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளை பெற்று பயன் பெறலாம்” என்று தெரிவித்தார்.

 

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *