கடல்புறாவைக் கொன்றவனுக்கு 12 வாரம் சிறை.!

dttamil

லண்டன்,

இங்கிலாந்தில் கடல்புறாவை காலால் உதைத்து கொன்றவருக்கு 12 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ லீ ஜோன்ஸ். இவர் தனது காரை நிறுத்துமிடத்தில் சீகல் எனப்படும் கடல்புறா ஒன்று எச்சமிட்டு வந்துள்ளது.

இதனால் கோபமடைந்த ஆண்ட்ரூ, கடல் புறாவை விரட்டியுள்ளார். அதில் கீழே விழுந்த அந்தப் பறவையை காலால் எட்டி உதைத்தார்.

அதில் கடல்புறா பரிதாபமாக உயிரிழந்தது. ஆண்ட்ரூவின் இந்தச் செயல் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஆண்ட்ரூவுக்கு 12 வாரம் சிறைத்தண்டனையும், இந்திய மதிப்பில் 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா தோல்வி, காஷ்யப் முன்னேற்றம்

லண்டன், இங்கிலாந்தில் கடல்புறாவை காலால் உதைத்து கொன்றவருக்கு 12 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ லீ ஜோன்ஸ். இவர் தனது காரை நிறுத்துமிடத்தில் சீகல் எனப்படும் கடல்புறா ஒன்று எச்சமிட்டு வந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஆண்ட்ரூ, கடல் புறாவை விரட்டியுள்ளார். அதில் கீழே விழுந்த அந்தப் பறவையை காலால் எட்டி உதைத்தார். அதில் கடல்புறா பரிதாபமாக உயிரிழந்தது. ஆண்ட்ரூவின் இந்தச் செயல் அருகில் […]

Subscribe US Now