மாதவன்-அனுஷ்கா நடிக்கும் ‘நிசப்தம்’ பர்ஸ்ட் லுக்

dttamil

சென்னை,

தமிழில் ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிர் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றவர் அனுஷ்கா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலியின் வெற்றிக்கு பின் இவர் ‘பாகமதி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து இவர் நிசப்தம் என்கிற படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நிசப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அனுஷ் இந்த படத்தில் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தினகரனும் திமுகவில் சேருவார்: அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

சென்னை, தமிழில் ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிர் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றவர் அனுஷ்கா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலியின் வெற்றிக்கு பின் இவர் ‘பாகமதி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து இவர் நிசப்தம் என்கிற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் […]

Subscribe US Now