சென்னையில் கே.பாலசந்தர் சிலையைத் திறந்து வைத்த கமல், ரஜினி.!

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தில் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா, அவரது தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்குரைஞா் டி. சீனிவாசன் உருவச் சிலை திறப்பு விழா மற்றும் ‘மய்யம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்’ தொடக்க விழா ஆகியவை நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்று, சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலகக் குருவான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலையை கமலும் ரஜினியும் இணைந்து திறந்தார்கள். இந்த விழாவில் பாலசந்தா் குடும்பத்தினா், மணி ரத்னம், நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இன்று மதியம் 3.30 மணிக்கு, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை சத்யம் திரையரங்கில் ‘ஹேராம்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. படம் முடிந்ததும், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் கமல் கலந்து கொண்டு பதிலளிக்கிறார்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *