இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா!

dttamil

லடாக்,

இந்திய எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இந்தியா சாலை அமைக்க சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லடாக் யூனியன் கல்வான் ஆற்றுப்பகுதியில் இந்திய ராணுவம் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் சீனாவின் எல்லைகளை தொடுவதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையில் இந்திய எல்லை அருகில், சீனத் துருப்புகள் 70-80 வரை கூடாரங்களை அமைத்துள்ளனர். அதில் கனரக வாகனங்கள், கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும் கூடுதலாக படகுகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபடும்பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இரு நாட்டுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. எனினும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. 

இதையும் வாசிக்கலாம்:                                                                                                                                                                                      விமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்

லடாக், இந்திய எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இந்தியா சாலை அமைக்க சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லடாக் யூனியன் கல்வான் ஆற்றுப்பகுதியில் இந்திய ராணுவம் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் சீனாவின் எல்லைகளை தொடுவதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையில் இந்திய எல்லை அருகில், சீனத் துருப்புகள் 70-80 வரை கூடாரங்களை அமைத்துள்ளனர். அதில் கனரக வாகனங்கள், கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் […]

Subscribe US Now