கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு

dttamil

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3ம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அவர், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது சளி, ரத்த மாதிரிகள் நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், அந்த நபர் உயிரிழந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகே, அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து

கன்னியாகுமரி, கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 3ம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அவர், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது சளி, ரத்த மாதிரிகள் நெல்லை மருத்துவமனைக்கு […]
this image represent chennai koyambedu market

Subscribe US Now