சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

dttamil

பெய்ஜிங்,

சீனாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளில் பரவியுள்ளது.  எனினும், உகானில் ஊரடங்கை அமல்படுத்தி பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  ஊரடங்கு தளர்வும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், சீனாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஹிலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ளூர் அளவில் ஒருவருக்கு பரவி உள்ளது. மீதி 11 பேரும் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒருவர் கூட சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. அதே நேரத்தில் 89 பேர் கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கையும் 49-ல் இருந்து 8 ஆக குறைந்தது.

நேற்று முன்தினம் சீனாவில் 3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பெய்ஜிங்கில் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர் ஆவார். 2 பேர் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது. 77 ஆயிரத்து 346 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தனர்.  சீனாவில் சிகிச்சை பலனின்றி இறந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி

பெய்ஜிங், சீனாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளில் பரவியுள்ளது.  எனினும், உகானில் ஊரடங்கை அமல்படுத்தி பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  ஊரடங்கு தளர்வும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், சீனாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் […]

Subscribe US Now