ஓமனில் சட்டவிரோத சமையலறை மூடல்.! மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.!

மஸ்கட்,

ஓமனில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சமையலறை கூடம் மூடப்பட்டது. அரசின் உரிமம் பெறாமல் நடத்தியதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

வடக்கு (நார்த்) அல் பதினா பகுதியில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சமையலறை ஒன்று செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த சமையலறை உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த சமையலறையை மூடி நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து சோகர் மாநகராட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சோகர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது குடியிருப்பு பகுதியில் சமையலறை ஒன்று உரிமம் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு உடலுக்கு தீங்கு அளிக்கும் வகையில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த சமையலறையை மூடி சீல் வைத்தனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. வாடிக்கையாளர்களின் சுகாதாரத்துக்கு தீங்கிழைவிக்கும் வகையில் நடைபெறும் எவ்வித சுகாதார சீர்கேட்டையும் சகித்துக் கொள்ள மாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் முகாம்களில் செயல்பட்டு வரும் சமையலறை கூடங்கள் கூட, ஓமன் அரசின் ஒப்புதலின் பேரிலே செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *