பாலியல் வழக்கில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என தீர்ப்பு

dttamil

வாஷிங்டன்,

பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார்.

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன்( வயது 67)  மீது நடிகை ஏஞ்சலினா ஜூலி  உள்பட 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர்.

இதுபோல் நடிகை ரோஸ் மெக்கோவன், அன்ன பெல்லா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

தற்போது பாலியல் வழக்கில் அவரை மன்ஹாட்டன் நீதிமன்றம் குற்றவாளியாக  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வரும் வரையிலும் நீதிமன்றம் அருகிலுள்ள போர் சீசன்ஸ் ஓட்டலில் வழக்கறிஞர்களுடன் ஹார்வி விலையுயர்ந்த காபி  அருந்திக் கொண்டிருந்தார். தீர்ப்பு வெளியானதும் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பின்னர் கைவிலங்கிட்டு ரைக்கர்ஸ் தீவு சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டார். 11 ஆம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் வரை, அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார். வழக்கில் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தீர்ப்பு குறித்து நடிகை ரோஸ் மெக்கோவன் கூறும் போது  “இது ஒரு சிறந்த நாள்”  தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குரல்கள் கேட்கப்படும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திய உள் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது:அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன்( வயது 67)  மீது நடிகை ஏஞ்சலினா ஜூலி  உள்பட 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர். இதுபோல் நடிகை ரோஸ் […]

Subscribe US Now