தங்கம் விலை புதிய உச்சம்

dttamil

சென்னை,

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சில நேரத்தில் விலை குறைந்து இருந்தாலும், தொடர்ந்து விலை உச்சத்தை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரத்தையும், சவரன் ரூ.33 ஆயிரத்தையும் தாண்டியது. 

சென்னையில்  இன்று 22 காரட் ஆபரணத்தங்கம்  கிராமுக்கு  ரூ.94 உயர்ந்து  ஒரு கிராம் ரூ.4,166 ஆகவும் சவரனுக்கு ரூ.752 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.33,328 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.53.30க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு

சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சில நேரத்தில் விலை குறைந்து இருந்தாலும், தொடர்ந்து விலை உச்சத்தை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரத்தையும், சவரன் ரூ.33 ஆயிரத்தையும் தாண்டியது.  சென்னையில்  இன்று 22 காரட் ஆபரணத்தங்கம்  […]

Subscribe US Now