தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

ஆபரணத்தின் தங்கத்தின் விலை நேற்று சவரன் 31 ஆயிரம் ரூபாயை தாண்டி, 31,056 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 3,872 ரூபாயாக விற்கப்படுகிறது. இதேபோல் சவரன் தங்கம் 80 ரூபாய் குறைந்து 30,976 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் சரிந்து, 50 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து, 50 ரூபாய் 80 காசாக உள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *