மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு..!

புதுடெல்லி,

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2வது காலாண்டில் நான்கரை சதவீதமாக சரிவடைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் ஜிடிபி 5 சதவீதமாக சரிவடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பொருளாதார நிபுணர்களின் கணிப்புக்கு ஏற்ப, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டுக்கான ஜிடிபி நான்கரை சதவீதமாக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று அக்டோபர் மாதத்தில் சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சி 5 புள்ளி 8 சதவீதமாக குறைந்துள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *