தாமிரபரணியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்..!

dttamil

நெல்லை,

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக நன்றாக மழை பெய்து வருகிறது.  3 மாவட்டத்திலும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அந்த இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம்  142.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1754 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பை கருதி அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொங்கல் பரிசு சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

நெல்லை, பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக நன்றாக மழை பெய்து வருகிறது.  3 மாவட்டத்திலும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அந்த இரண்டு அணைகளும் […]

Subscribe US Now