டெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து

dttamil

புதுடெல்லி,

டெல்லியிலுள்ள குடிசைப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தேசிய தலைநகர் டெல்லி கிர்டி நகர் பகுதியில் சுன்னா பட்டி குடிசைப் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டெரிந்த தீயை அணைக்க 24க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவப் பகுதிக்கு விரைந்தன.
சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தீ விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து டெல்லி தீயணைப்பு காவல் நிலைய தலைமை அலுவலர் ராஜேஷ் பன்வார் கூறுகையில், ‘கிர்டி நகர் சுன்னா பட்டி குடிசைப் பகுதியில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக இரவு 11.20 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம்” என்றார்.

இதையும் வாசிங்க: கோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்!

புதுடெல்லி, டெல்லியிலுள்ள குடிசைப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தேசிய தலைநகர் டெல்லி கிர்டி நகர் பகுதியில் சுன்னா பட்டி குடிசைப் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டெரிந்த தீயை அணைக்க 24க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவப் பகுதிக்கு விரைந்தன. சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். […]
Every devotees should observe Ayya Vaikundar Nal Mangala Perunal Prayer says Bala Prajabathi Adikalar

Subscribe US Now