சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு

dttamil

பெங்களுரு,
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடகாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ”பிரதமர் நிவாரண நிதி அல்ல பிரதமர் நிவாரண மோசடி (PM CARES Fund as PM Cares Fraud) என்ற கருத்து பதியப்பட்டது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞர் பிரவீன் என்பவர் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சோனியா காந்தி மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தை தூண்டுதல்) மற்றும் 505 (பொதுமக்களை தவறாக வழிநடத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குரைஞர் பிரவீன் கூறுகையில், ”இந்தப் பணத்தில் பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள் என்று அவர்கள் கூறினார்கள். கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடிக்கு இடையே, இந்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு இந்த வதந்திகள் பரப்பப்பட்டது. ஆகவே இதுகுறித்து நான் புகார் அளித்தேன். சாகர் காவல்நிலைய காவலர்கள் தீர ஆராய்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்” என்றார்.

இதையும் வாசிக்கலாம்: உத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு

பெங்களுரு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடகாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ”பிரதமர் நிவாரண நிதி அல்ல பிரதமர் நிவாரண மோசடி (PM CARES Fund as PM Cares Fraud) என்ற கருத்து பதியப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞர் பிரவீன் என்பவர் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் […]
covid-19-indore-victims-rises-to-2850

Subscribe US Now