அய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்!

dttamil

சுவாமிதோப்பு,

அய்யா வைகுண்டர், வைகுண்டம் அடைந்த நாளான வைகாசி 21ஆம் தேதியை நல் மங்கலப் பெருநாளாக அனுசரிக்க வேண்டும் என அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார்.

Every devotees should observe Ayya Vaikundar Nal Mangala Perunal Prayer says Bala Prajabathi Adikalar
Every devotees should observe Ayya Vaikundar Nal Mangala Perunal Prayer says Bala Prajabathi Adikalar

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
170 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லம் ஆண்டு 1026 வைகாசி 21ஆம் நாள் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்டம் ஏகினார். அப்போது கலங்கி நின்ற மக்களிடத்தில், இல்லற இயல்பாய் வாழவும், பதற்றமின்றி ஒன்றுபட்டு பண்பாய் வாழுங்கள் என தெளிவுப்படுத்தினார்.
இந்தாண்டு 170ஆவது அய்யா வைகுண்டர் நல்மங்கலப் பெருநாள் வருகிற புதன்கிழமை (ஜூன் 3ஆம் தேதி) வருகிறது. அன்று மாலை 3 மணிக்கு நல்மக்கள் அனைவரும் அவரவர் இல்லத்தில் அகல் விளக்கேற்றி, வெற்றிலை, பாக்கு, பழம், ஐந்து பூ, ஒரு சொம்பு பதம் வைத்து பணிவிடை செய்து ஒரு சிறிய பானை பச்சரிசி பாலன்னம் வைத்து வணங்க வேண்டும்.
பச்சரிசி பாலன்னம் பொங்கியவுடன் தேங்காய் போட்டு இறக்க வேண்டும். பாலன்னத்தில் உப்பு போடக் கூடாது. இந்த பணிவிடை ஆடம்பரம் இல்லாமல், அடக்கமாக நடத்தல் வேண்டும்.
இதேபோல் அனைத்து பதிகள், தாங்கல்களிலும் மாலை 5 மணிக்கு ஒரே நேரத்தில் சங்கு முழங்க வேண்டும். தகுந்த இடைவெளி கடைப்பிடித்து, லட்சக்கணக்கான மக்கள் செய்யும் இந்த கூட்டுப் பிரார்த்தனை வெற்றிபெறும்.
கரோனா கலி மாய நோய் அகலும். இது கட்டளை அல்ல. இந்த ஆலோசனையின் நோக்கம், அய்யாவின் அருள் வேண்டுதலே ஆகும்.
இவ்வாறு பாலபிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் வாசிங்க: உத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Mrs Madarase India 2020 title winner-Shreyaa Sumi from chennai

சுவாமிதோப்பு, அய்யா வைகுண்டர், வைகுண்டம் அடைந்த நாளான வைகாசி 21ஆம் தேதியை நல் மங்கலப் பெருநாளாக அனுசரிக்க வேண்டும் என அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 170 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லம் ஆண்டு 1026 வைகாசி 21ஆம் நாள் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்டம் ஏகினார். அப்போது கலங்கி நின்ற மக்களிடத்தில், இல்லற இயல்பாய் […]
mrs-madarase-india-2020-title-winner Shreyaa Sumi

Subscribe US Now