இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் பாப் வில்லிஸ் காலமானார்

dttamil

லண்டன்,

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் காலமானார்.

அவருக்கு வயது 70. இங்கிலாந்து அணியின் ஜாம்பவானாக விளங்கிய அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 325 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

1981ம் ஆண்டு நடந்த ஆஷஷ் தொடர் கிரிக்கெட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலியாவை 43 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்த பெருமை பாப் வில்லிசைச் சேரும்.

64 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வில்லிஸ் கடந்த 1984ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர் வர்ணனையாளராக தனது பயணத்தைத் தொடர்ந்த பாப் வில்லிஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்.பி.,க்களுக்கு மலிவு விலை உணவு கிடையாது.!

லண்டன், இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் காலமானார். அவருக்கு வயது 70. இங்கிலாந்து அணியின் ஜாம்பவானாக விளங்கிய அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 325 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 1981ம் ஆண்டு நடந்த ஆஷஷ் தொடர் கிரிக்கெட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலியாவை 43 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்த பெருமை பாப் வில்லிசைச் சேரும். […]

Subscribe US Now