அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய வெல்ஸ்பன் நிறுவன சிஇஓ தீபாலி

புதுடெல்லி,

வெல்ஸ்பன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி, அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டீல், டெக்ஸ்டைல்ஸ் உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான வெல்ஸ்பனின் இந்தியாவுக்கான முதன்மை செயல் அதிகாரி தீபாலி கோயங்கா. இவர் ஸ்டீரிட் டான்சர் 3டி படத்தின் இந்தி முக்காபுலா பாடலுக்கு அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

சிஇஓ ஒருவர் அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடுவது மிகவும் அரிது எனவும், பணியிடத்தை மகிழ்வாக வைத்துக் கொண்டதற்காகவும் தீபாலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *