தர்பார் செகண்ட் லுக்

dttamil

சென்னை,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டு உள்ளது லைகா நிறுவனம். மாலை ஆறு மணி அளவில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அவ்வப்போது இப்படம் குறித்து வெளியாகும் தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இதன்படி நேற்று மாலை ஆறு மணிக்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

darbar-second-look-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

 ‘அபராதத்தை மாநில அரசே குறைக்கலாம்: நிதின் கட்காரி

சென்னை, ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டு உள்ளது லைகா நிறுவனம். மாலை ஆறு மணி அளவில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள். ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Subscribe US Now