முதலீடுகள் செய்வதற்கு இந்தியாவுக்கு வாருங்கள்: பிரதமர் மோதி அழைப்பு

பாங்காக்,

முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில்புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள் என தாய்லாந்தில் தொழில்துறையினருக்கு பிரதமர் மோதி அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோதி, அங்கு ஆதித்ய பிர்லா தொழில்குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டி பேசிய அவர், முதலீடுகள் செய்வதற்கும் எளிதாக தொழில்புரிவதற்கும் உலகிலேயே மிகவும் சிறந்த இடம் இந்தியா. எளிதாக தொழில்செய்வதற்கான சூழல், வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு, உற்பத்தித் திறன், காப்புரிமைகள், வனங்களின் பரப்பு என பல விஷயங்கள் வளர்ந்திருப்பதாகவும், அரசு அதிகாரிகளின் தலையீடு, வரிகள், வரி விகிதங்கள், ஊழல் போன்றவை குறைந்திருக்கிறது.

தொழில் தொடங்குவதற்கும், சிறந்த சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்கும் இந்தியா வாருங்கள். அப்படி வருபவர்களை இருகரம் விரித்து வரவேற்பதற்கு தயாராக இருக்கிறோம்.

2014ஆம் ஆண்டில் பாஜக அரசு பொறுப்பேற்றபோது இந்தியா 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்தது, 5 ஆண்டுகளில் அது 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்தது.

65 ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்த நிலையை, 5 ஆண்டுகளில் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த முடிந்தது. இதன் மூலம், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என பிரதமர் கூறினார்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *