அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு

சென்னை,

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-

சென்னையில் 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு  வாய்ப்பு உள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும் 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது எனவும், சூறாவளி காற்று  வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *