முழுகொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை..!

dttamil

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு  முழு கொள்ளளவை எட்டுகிறது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக, 2 வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 22 ம் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அக்டோபர் மாதத்தில் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர்தேக்கமுடியும் என்பதால் அணையிலிருற்து அதிகப்படியான உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழுகொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டுக்குப்பின் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டுகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 76 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 104.17 அடியாகவும் நீர் இருப்பு 32.1 டிஎம்சி ஆகவும் உள்ளது.

அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2000 கனஅடி நீரும் என மொத்தம் 2600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் நீர், உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதலீடுகள் செய்வதற்கு இந்தியாவுக்கு வாருங்கள்: பிரதமர் மோதி அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு  முழு கொள்ளளவை எட்டுகிறது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக, 2 வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான […]

Subscribe US Now