ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

முன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ.) நிரப்பப்பட உள்ள 76 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 76

பணி: Deputy General Manager (Capital Planning) – 01

சம்பளம்: மாதம் ரூ.68,680 – 76,520

பணி: SME Credit Analyst (Sector Specialist) – 11

பணி: SME Credit Analyst (Structuring) – 04

பணி: SME Credit Analyst (Credit Analyst) – 10

பணி: Credit Analyst  (MMGS-III)- 30

சம்பளம்: மாதம் ரூ. 42,020 – 51,490

பணி: Credit Analyst (MMGS-II) –  20

சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950

தகுதி: சி.ஏ., எம்பிஏ (நிதி), முதுநிலை டிப்ளமோ மேனேஜ்மென்ட் படித்தவர்கள், பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் படிப்புடன் எம்பிஏ(நிதி) அல்லது சிஏ, சிஎஃப்ஏ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 45க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு 3 -ஆம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கபப்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2019

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *